Monday, November 23, 2009

இயல்பு

குடை ஓன்று
ஆசைப்பட்டது.....
வெயிலிலும்
மழையிலும்
நனையாமல்
இருக்க
மரம் ஓன்று
ஆசைப்பட்டது.....
நிழலில்
இருக்க
நிலவு
ஆசைப்பட்டது.....
நெருப்பில்
குளிக்க
விளக்கு
ஆசைப்பட்டது.....
இருட்டில்
இருக்க
மனிதனாக
இல்லாமல்
இருக்க
மனிதன்
ஆசைப்பட்டது.....
போல்.

8 comments:

Kannan said...

இல்லாத ஒன்னுக்கு அலைவது தானே வாழ்கையாய் இருக்கு...!! அதை இயல்பாய் சொல்லிருகிங்க...சூப்பர்

ஹேமா said...

சித்தப்பா வந்தேன்.முதல்ல சுகம்தானே.

ரெண்டாவதா சித்தப்பா அண்ணா பண்ற அட்டகாசம் தாங்கமுடில.த்ரிஷா...இன்னும் இருக்கு சித்தப்பா.ஒண்ணு ஒண்ணாச் சொல்றேன்.ஆனா கவிதை மட்டும் அசத்தலா எழுதறார்.அண்ணாவோட மகன் அஷோக் அப்பாவும்தான்.

ஹேமா said...

எதுவும் இயல்பு மாறாமல் இருப்பதே அதன் அழகு.இயல்பு தவிர்க்கையில் அதன் பெயர்கூட பொருத்தமற்றுப்போகிறது.அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

சித்தப்பா சந்தோஷமாயிருக்கு பாத்தது.எப்பவும் சுகமா இருந்துகொள்ளுங்க.ஆசீர்வாதஙகள் கேட்டபடி.அன்போடு ஹேமா.

பா.ராஜாராம் said...

அருமையான சித்திரம் சித்தப்பா!

தத்துவார்த்தமான வெளிப்பாடு.தொடர்ந்து எழுதும் பொருட்டு..உங்களுக்கென ஒரு இடம் இருக்கும்.ஏனெனில் எழுத்தின்,அடர்த்தி கூடுவதை நுகர வாய்க்கிறது.ப்ரியம் சித்தப்பா.

பா.ராஜாராம் said...

சித்தப்பா,

கம்ப்ளைன்ட் பண்ணும் ஹேமாவிடம் கேளுங்கள்..

"என்னாச்சு 200sfr?என்று மட்டும்.மற்றது எல்லாம் பொய் சித்தப்பா..

த்ரிசான்னா யார் சித்தப்பா?ஸ்ரீதேவி சித்தியை தெரியும்...

அண்ணாதுரை சிவசாமி said...

நல்லவேளைக்கு தப்பிச்சே.ஸ்ரீ தேவியை வேற முறை வச்சு சொல்லி இருந்தேயன்னா
நடக்கறதே வேறை!

பா.ராஜாராம் said...

பார்த்தியா ஹேமா,

நான் என்ன சொன்னேன்?

சித்திம்மா..பூரி கட்டை தயாரா?

ஆமா,த்ரிசான்னா யாரு லதா?(கிடு..கிடு..)

பா.ராஜாராம் said...

கேட்டீங்களா? உங்கள் மகளிடம்? 200 sfr என்னாச்சு என?

போய் படியுங்கள் உப்பு மட சந்தியில்,"இப்படியும் நடக்கிறது".

அப்பாடி மனசு நிம்மதி ஹேமா.

Post a Comment