Wednesday, August 17, 2011

காதலித்தாலே அச்சமென்ன....

மறக்கமுடியாத பாட்டு...... 'மொஹலே ஹி ஆசம்' ஹிந்தி படத்தில் வரும்
அருமையான பாட்டின் தமிழ் வடிவம்.....

http://youtu.be/wGciE40wpe4

Thursday, August 11, 2011

காட்சிப்பிழை


தூரத்தில் தெரிந்தாள்.......
அவளென்று எண்ணி மெல்ல நகர்ந்தார்....
அவளை நோக்கி....
அவர்தான் என்றெண்ணி அவளும் நகர்ந்தாள்...
அவரை நோக்கி....
அருகில்தான் உணர்ந்தார்கள்.....
அவள் அவர் நினைத்த 'அவள்' இல்லைஎன்றும்..
அவர் அவள் நினைத்த 'அவர்'இல்லை என்றும்..
கீழே விழுந்த அவரது கைத்தடியை ...
முக்கி முனங்கி குனிந்து எடுத்து கொடுத்தாள்...
"பார்த்துப் போங்க "
கட்டையில் வேகும்வரை கனவுகளும் மாயாதோ?

Saturday, August 6, 2011

எல்லாமுமே முடியும்தான்...

திண்டுகல்லில் நான் வேலை பார்க்கும்போது வேலைப்பளு

அவ்வளவு கடுமையா இருக்கும்.இரவு ரூமிற்கு வரும் போது

12 மணிக்கு மேல் ஆகி விடும்.காலையில் எந்திரிக்க 7 மணி ஆகி

விடும்.அடுத்த ரூமில் தங்கி இருக்கும் District Education Officer

ரெகுலரா அதிகாலையில் வாக்கிங் செல்பவர்.

அவர் ஒரு நாள் "டெய்லி காலையில் வாக்கிங் போங்க உடம்புக்கு

நல்லது என்றார்"

"எங்கே சார் முடியுது.....இருக்க வேலையே மூச்சு முட்டுது"

அவர் கேட்டார் "பில் கிளிண்டன் தெரியுமா...உங்களுக்கு?"

"ஏன் சார்,,,,,அமெரிக்க ஜனாதிபதி"

"அவரே தினம் ஒரு மணி நேரம் வாக்கிங் போறார்"...சொல்லிவிட்டு

அவர் ிறுவிறுன்னு ோய்ட்டார்.

செவிட்டில் அறைந்தது மாதிரி இருந்தது.அடுத்த நாளில் இருந்து

இன்றுவரை குறைந்தது ஒரு மணி நேரம் வாக்கிங் போறேன்.

நேரத்தை வகைப் படுத்திக்கொண்டால் எல்லாமுமே முடியும்தான்!

Friday, August 5, 2011

நெஞ்சில் அறையப்படும் சில நிகழ்வுகள் ..

உங்களுக்கு நல்லேந்திர பாண்டியன் அண்ணனைத் தெரிந்திருக்க
அவ்வளவு வாய்ப்பில்லை.1968-1970 வருடங்களில்தான் என்று நினைக்கிறேன்.
நான் காலேஜ் முடித்து லேட்டா வர்ர நேரமும்...அவர் போஸ்ட் ஆபீஸ் வேலைகள்
முடித்து வர்ர நேரமும் பல நேரங்களில் ஒத்துப் போகும்.சைக்கிளில் வரும் இருவரும்
இறங்கி காலாரப் பேசி வருவோம்.அப்போது அவர் பேச்சு முழுவதும் சினிமாவைப் பற்றியே
இருக்கும்.
பல நேரங்களில் உணர்ச்சிவயப்பட்டு பேசுவார்."நீ வேணும்னா பார் தம்பி ஒரு நாள் இல்லாவது ஒரு நாள் இந்த அண்ணன் ரிடையர் ஆறதுக்கு முந்தி ஒரு பெரிய டைரக்டரா வருவான்"அப்டிங்கிரத்தை ரொம்ப அழுத்தம் திருத்தமா சொல்லுவார்.பல கதைகள் சொல்லி இருக்கார் .எம்.ஜி.ஆர்.ன்னா கதை இப்படி இருக்கணும்.....சிவாஜின்னா இப்படி இருக்கணும்.கேமராவை லாங் ஷாட்டில் வைத்து இப்படித்திருப்பி...அப்புறம் குளோசப்பா கொண்டுவந்து.....அப்டின்னு எதை எதையோ சொல்லுவார்.ஆனா அவர் மனம் முழுமைக்கும் சினிமா அப்பி கிடந்தது உண்மை. ஆளும் அவ்வளவு அழகா இருப்பார்.அதன் பிறகு காலங்கள் ஓட ஆரம்பிக்க அண்ணனைப் பார்த்து வெகு நாள் ஆகிவிட்டது.
காலில் அடிபட்டதை வடமலையான் ஆஸ்பத்ரியில் காண்பிக்க ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன்.நாராயணா கபேயைத் தாண்டும் போது அந்த சுவரொட்டி கண்ணில் பட்டது.
பாதி தெரிந்தது."நல்லேந்திர.."என்ற வார்த்தை மட்டும் தெரிந்து மறைந்தது.மனசு ஒரு நிலையில் இல்லை.அதற்குள் ஆட்டோ அடுத்த தெரு முக்குவரை சென்றுவிட்டது.
"தம்பி,ஆட்டோவைத்திருப்பு..."
"எதற்கு சார்?"
"சொன்னாத் திருப்பு தம்பி"
"எங்கே சார் போகணும்"
"வந்த வழியே போ"
முகச்சுளிப்போடு திருப்பினான்.கொஞ்ச தூரம் போய் இருக்கும்.
"திரும்பவும் வீட்டுக்கேயாவா சார்"
"இன்னும் கொஞ்ச தூரம் போ...கொஞ்சம் மெதுவாப் போ"
சுவரொட்டி முழுசும் தெரிந்தது.ஆம் அண்ணனுக்கான கண்ணீர் அஞ்சலிக்கான சுவரொட்டி.
"ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்" என்ற வார்த்தை நெஞ்சை அறைந்தது.ஆம்....பலருடைய கனவுகள் வெறும் கனவுகளாகவே...
முடிந்து விடுகின்றன. சில நிகழ்வுகள் நெஞ்சை அறையத்தான் செய்கின்றன