Monday, July 25, 2011

நிம்மதி

கடந்த இருபது வருசமா காத்திருந்தான் கந்தசாமி!
கடைசியில் கருணை மனு நிரகரிக்கப்பட்டதாம் !
அவனை அறியாமல் சொல்லிய வார்த்தைகள்
"அப்பாட...நிம்மதி"

Friday, July 22, 2011

எல்லாம் இருக்கின்றன...

முனியம்மாள் அக்காள் அரைத்த மாவு உரல்....
அம்மாவோட பாக்கு உலக்கை....
அப்பாவோட உடைந்த கண்ணாடி..
சின்ன அண்ணன் உறிஞ்சிப் போட்ட சிசர்ஸ் துண்டு...
பெரிய அண்ணன் உட்கார்ந்து படித்த தோட்டத்து திண்ணை ...
பெரிய அக்கா கொடுத்த மலேசியா சட்டை..
சின்ன அக்கா கொடுத்த சிகப்புகரை வேட்டி ...
எல்லாம் இருக்கின்றன...இவர்கள் இருந்ததைச் சொல்ல..

Saturday, July 16, 2011

விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்!

ஒரு நொடிப்பொழுது வாழ்க்கையின் போக்கையே மாற்றி விடுமா?
ஆம்! மாற்றிவிடும்.
"சும்மா இருத்தலே சுகம்" எந்த அயோக்கியன் சொன்னதுன்னு தெரியலே.
சும்மா இருத்தலைப் போல் ஒரு கொடுமையான் விஷயம் உலகத்தில்
எதுமே இல்லை.அதை அனுபவித்துப் பார்த்தவர்கள் மட்டுமே உணர முடியம்.
பொன்னியின் செல்வன் 5 பாகம்,மகாத்மாவின் சத்ய சோதனை,ராஜமுத்திரை
ரெண்டு பாகம்,பார்த்திபன் கனவு,Jeffrey Archer ன் kANE And Abel,ஜெய காந்தனின்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்...சுதாவின் கற்றதும் பெற்றதும் எது கிடைக்குதோ அது ...இப்படி ஏராளாமான புத்தகங்கள்...MKT யின் சீவகசிந்தாமணியில்
இருந்து ஹரிதாஸ் வரை MGR ன் மருத நாட்டு இளவரசியில் இருந்து ஆயிரத்தில் ஒருவன் வரை...எல்லாம் பார்த்தாச்சு..மனம் ஏனோ நிலை கொள்ளவில்லை.
சின்ன விபத்துதான்.முழங்கால்வரை கட்டு.அசையக்கூடாதாம்! 60 நாள் இருக்கனுமாம்!ஆச்சு...40 நாள் ஆச்சு.இன்னும் 20 நாள்.முனிக்காலை ஊண்டி லேசாக நடந்து கொள்கிறேன்.சுவாசம் இப்பொழுதுதான் இயல்பா இருக்கு.
"விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்" என்று
பராசக்தியிடம் மன்றாடிக் கேட்பான் பாரதி.கிறுக்குபய இதை எதுக்கு கேட்கிறான்னு
அப்ப நினைச்சேன்.
இப்ப பாரதியைப்பார்த்தேன்னா "சத்யம்டா மகனே சத்யம்"ன்னு நெடுஞ்சாங்கடையா
கும்பிட்டு விழுவேன்.