Tuesday, June 2, 2009

தியானம்


வெட்டவெளி பொட்டல்......
இரவின் நிசப்தம்..........
அணைக்க விருப்பமா இல்லையா என்பது
தெரியக்கூடாமலே லேசாக வருடும் காற்று!
பாரதி சொன்ன மாதிரி பத்து பன்னெண்டு தென்னை மரங்கள்!
எங்கோ சல சலத்து நிசப்தத்தை முறைக்கும் நீரோடை!
"நானும் முழித்துதான் இருக்கிறேன்"-குக்கூவிடும் குருவியின் குசும்பு!
"எல்லாவற்றையும் 'ஏக் தம்மில்' வெள்ளியாக மாற்றுகிறேன் பார்"
பௌர்ணமி சந்திரனின் பகீரத பிரயத்தனங்கள் !
"முகர்ந்து பார்க்க காசா கேட்கிறேன்"-முனங்கிடும் பூக்கள்
இவை எல்லாம் நோக்கவோ, நுகரவோ
நேரமில்லையாம் மனசுக்கு!
ஐந்நூறு, ஆயிரம் கட்டி தலைப்பா சாமியார்களும், தாடிசாமியார்களும்
நடத்தும் 'தியான' வகுப்புகளை தேடி அலைகிறது திமிரெடுத்த மனசு!

8 comments:

அன்புடன் அஜய் ......... said...

மிகவும் அருமை.. வர்ணணை மிகவும் பிரமாதம்...

Kannan said...

உண்மை சுடும் என்பதை மீண்டும் உணர வைத்து இருகின்றிர்கள். நன்றி

அண்ணாதுரை சிவசாமி said...

Dear Ajay,

Thanks so much for your comments, Its encourage me to write more, please visit my blog at your leisure

Anbudan
Annadurai

கவிதாசிவகுமார் said...

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கவிதை திறனிலும் கலக்குகிறீர்கள் சித்தப்பா

http//azutham.blogsot.com said...

கவிது,
உனது வார்த்தைகள் என்னை உத்வேக படுத்தியுள்ளன.
இன்னும் எழுதுவேன்.

venkataprathab said...

Appa Remba supera irukku..

அண்ணாதுரை சிவசாமி said...

Thanksda Makanae

Ramamoorthy said...

ஜூன் 2ல் தியானத்தில் அமர்ந்த அத்தான் அவர்கள் மீண்டும் எப்போது கண் திறப்பார், கவிதை வடிப்பார்?
வெங்கடேசபிராசாத்துக்கு ‘அப்பா ரொம்ப சூப்பரா இருக்கு’ - இதை விட்டால் வேறெ கமெண்டே இல்லையா?
கரிசல் மண்ணுக்கு போட்டியாக செம்மண் இலக்கியத்துக்கு புகழ் சேர்க்கும் முகமாக நீங்களும் மாப்பிள்ளையும் போட்டி போடுகிறீர்கள்.
வாழ்க உங்கள் எழுத்துப்பணி.
வளர்க உங்கள் எழுத்தார்வம்.
அன்புடன்
மூர்த்தி
(தாங்கள் ஒரு வலைபதிவு ஆரம்பித்த ஆச்சரியமான விஷயம் மதி மாப்பிள்ளை மற்றும் காயத்திரி முலமாக அறிந்து தங்கள் அனுமதியின்றி நுழைந்து விட்டேன். பொருத்தருள்க)

Post a Comment