Saturday, June 6, 2009

ஆசை

"ஆசையை விட்டொழி!"-புத்தர்
"அனைத்துக்கும் ஆசைப்படு!"-அறிவு ஜீவிகள்
அம்மொழி ஆண் என்றால் இம்மொழி பெண்தானே !
ஒன்றுக்கொன்று எதிர்மறையாக!
அதுமில்லாமல்,இதுவுமில்லாமல் திருநங்கையாக
இருக்கவே தீர்வு செய்தேன் முடிவாக!
ஆம்!அளவோடல்ல......அளவறிந்து ஆசைப்பட!

8 comments:

Sujitha said...

kalakureenga uncle....neenga nalla paduveenga-nnu thaan ninachaen...ivlo super-a kavithai ezhuthureenga....great!! ungal kavithai payanam thodara...melum melum kalakka enathu vazhthukkal...

அண்ணாதுரை சிவசாமி said...

மனதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா சுசி !இங்கு பூரண ஓய்வு.
மனதுக்கு பிடித்ததை செய்ய தவிர்க்க முடியாத ஒரு வாய்ப்பு.தொடருவேன்
என்று நம்புகிறேன்.

அண்ணாதுரை சிவசாமி said...

என் மீது மரியாதையும் உரிமையும் வைத்துள்ள உறவினர் இது பற்றி கேட்டதும்;நான் சொன்னதும்:

"ஏய்யா!புத்தரையே கொஸ்டின் பண்றே?ரொம்ப அதிமேதாவின்னு நினைப்பா?அந்தாளு
பாவம்,ஆசைபட்டா துன்பம் வந்துரும்;விற்றுங்கடான்னாறு.இவைங்க நல்ல விஷயத்தை எல்லாத்தையும்
முயற்சி பண்ணிப்பாருங்கன்னு 'அனைத்துக்கும் ஆசைப்படுங்கன்னு' சொன்னாய்ங்க.நீ என்ன எழவை
சொல்ல வர்ரே?"

"எதுக்கு டென்சன் ஆகறே?ஆளாளுக்கு ஒரு நியாயம் இருக்கும் போது எனக்குன்னு ஒரு நியாயம்
இருக்கக்கூடாதா?இப்ப உன்னையே எடுத்துக்க.பிரசரும் இருக்கு.சுகரும் இருக்கு.அறுபது வயசிலாவது
ஆசையை விட்ரோவோமேன்னு மாத்திரை சாப்டற ஆசையை விட்டேன்னு வச்சுக்க;சிவலோக பதவி சீக்கரம்
நிச்சயம். ஒலிம்பிக்லை ஓடறது நல்லவிசயம்தான்.அனைத்துக்கும் ஆசைபடுவோமேன்னு முயற்சி பண்ணுனேன்னு
வச்சுக்க, பத்து மீட்டர் ஓடரதுக்குள்ளே பரலோகம் நிச்சயம்.அய்யா!முழுசா போய்ட்டையின்னா பரவாயில்லை.
பாதியிலே போய் 'கோமான்னு' திரும்பி வந்தேன்னு வச்சுக்க;புத்தர் சொன்னதுதான் கரெக்ட்ன்னு உன்னை வச்சு
பாக்கிற ஆசையை உன்சொந்தங்க விட்ருவாய்ங்க.ஆக உனக்கிருக்கிற சுகர்,பிரசர் அளவறிந்து மாத்திரை சாப்பிட
ஆசை படுன்னு நான் சொல்றது சரிங்கிரியா,தப்புங்கிரியா?இப்ப லைட்டா நான் சொல்றதிலே ஒரு மாதிரியான
நியாயம் இருக்கிற மாதிரி தோணுமே?எல்லா விஷயத்துக்குமே கொஞ்சம் சரியாய் இருக்கும்.யோசிச்சு பாரு."

"கரெக்டா இருக்கிற மாதிரித்தான் தோனுது.ஆனாலும் கொஞ்சம் கொழப்பமா இருக்கு.அதுக்கு என்னோட
பிரசரையும் சுகரையும் எடுத்துக்கிட்டது கொஞ்சம் ஓவராகவும் இருக்கு.பாப்பம்.இன்னும் எவென் எவென் என்னென்ன
சொல்றான்னு."

Unknown said...

thatha
ena thatha pattaya kelapureenga.. karunai um aasai um super thata..
romba pudichuthu enaku.. inum neraya eluthunga thatha..

அண்ணாதுரை சிவசாமி said...

சுபியின் வருகைக்கு நன்றி.

பா.ராஜாராம் said...

chitthappaa,miga thaamathamaaga ezhuthavanthu,migavum arputhamaga ezhuthum pakkuvam "varam" chitthappaa.en appaavin sathyamaaga miga arputhamaai ezhuthukireergal.thodarungal...

பா.ராஜாராம் said...

enge iruntheergal ivvalavu arumayaana nadaiyai vaitthukondu."rascal"endru thalail oru kottu podanumpol irukku.padavaa...

அண்ணாதுரை சிவசாமி said...

கடைசி கமென்டை பார்த்துவிட்டு ரொம்ப
சிருச்சுட்டேண்டா,ராஜா

Post a Comment