Thursday, June 18, 2009

ஆறாவது.....



அமெரிக்க குளத்தருகே,
வெள்ளைநிற வாத்தொன்று,
விகற்பமின்றி உடன் நிற்கும் காக்கையும் கூட.
என்னமோ சொல்லியது வாத்து
விர்ரென்று பறந்தது காக்கை
விரும்பி கொத்திய மீனோடு.
வாத்தும் சிறிது வழி விட்டு ஒதுங்கியது.
என்ன எழவு சொல்லியிருக்கும் வாத்து?

என்ன புரிந்திருக்கும் எழவெடுத்த காக்கைக்கு?
மனம் என்னிடம் மறுகி....மறுகி....கேட்டது.
"ஆறாவது.... இருந்தால்தானே நாம்
நிறபேதம்.... இனபேதம் பார்ப்பதற்கு,
லிங்கன் வாத்தும் லூதர் காக்காயும்
அவதரிக்க அவசியமா நமக்கு,
குறையக் குறைய கூடி வாழ்வோம் நாம்,
கூடக் கூட குத்து வெட்டுத்தான்,
குண்டுமழையும்தான் ...."

சொல்லி இருக்குமோ வாத்து?
சொல்லி இருக்கலாம்தானே?.....

4 comments:

venkataprathab said...

Appa remba supera irukku. intha varthaigal thavira vera varthaigalil varnikka theriyavillail. Kalakkungal.

By,
vigi.

venkataprathab said...

daady...

அண்ணாதுரை சிவசாமி said...

உனது வாழ்த்துக்கள் எனக்கு மிகுந்த
உற்சாகம் கொடுக்குதடா தங்கம்

பா.ராஜாராம் said...

"எழுத வருவதற்கு இவ்வளவு தாமதமா?"
என தலையில் ஒரு கொட்டு வைக்கணும் போல்
இருக்கு என் செல்ல ராஸ்கல் சித்தப்பா!

Post a Comment