Tuesday, June 2, 2009

தவம்

தவம் என்பது யாதென உணர கானகம் சென்றேன்!
ஞானிகள் பலர் நவின்றதை நம்பி
காலைமடக்கி ஆசனம் போட்டு
கையை மடக்கி சின் முத்திரை இட்டு
கடுந்தவம் புரிந்தேன்!

கடைசியில் கடவுள் தோன்றினார்!
கடுந்தவம் புரிய காரணம் யாதென
கடவுள் வினவ,வீட்டிற்கு அவரை விருந்துண்ண
அழைத்தேன்.விலாசம் கேட்டார்!

கடமை தவறாத கண்ணியம் மிக்க காவலர் பெயரைச் சொல்லி
அவர் வீட்டிற்கு அடுத்த வீடு என்றேன்!
"அவர் வீட்டு எச்சில் சோற்றால்தானே இன்னும் வாழ்கிறேன்!
இன்னும் வாழ்வேன்! பசித்தால் புசிப்பதற்கு வேறெங்கும் செல்ல
நான் விரும்புவதில்லை" கடவுள் கூறி கனத்தில் மறைந்தார்.

தவம் என்பது யாதென உணர்ந்தேன்!
என் தவற்றையும் உணர்ந்தேன்!

2 comments:

rajaram.b.krishnana@gmail.com said...

vov... chitthappaa...adicchu dhool kilappireengale chittappaa...kavithaigalai munbe paartten.udan pathil ezhutha mudiyaatha sool nilai.puthiya anupavam paarthu pramippaaga irukkirathu chitthappaa!miha ethaarthamaana...iyalbaana nadayil vanthirukku chittappaa.fantastic!niraya vaasippin payan theinthathaa chittappaa.fantaastic chittappa!thiyaanam arputhamaana kavithai!welldone chitthappa!chitthappaavin arputhamaana mugam paarkka kidaithathil thambu peenavukkum,kannaavukkum,nanbar rameshirkkum niraya anbum santhoshangalum!vaazthukkal chittappaa!thodarnthu ezhuthi vaarungal!

அண்ணாதுரை சிவசாமி said...

ராஜா,
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷியா நான்?வேறு வழியில்லாமல்
ஓய்வு கிடைத்திருக்கிறது.மனது அசை போடுகிறது.அவ்வளவுதான்.

Post a Comment