Sunday, March 27, 2011

Old Madurai, South India, in 1945 and now



66...வருசத்திற்கு முன்னர்..மதுரை எப்படி..இருந்துருக்கும்!அதை இப்ப..
பார்க்க முடியுமா!நான்..பிறக்கறதுக்கு..நாலுவருசத்துக்கு..முன்னை..
இம்பீரியல் ..தியேட்டர்ல..என்ன படம்...போட்ருப்பாயிங்க? விளம்பரம்..என்ன
மாதிரி..பண்ணி இருப்பாய்ங்க! எங்க அம்மா"அப்பெல்லாம்..நாங்க..'பப்' வச்ச
குட்டைக்கை..ரவிக்கைதான்..போட்ருப்பம்!"..அது எப்படி இருக்கும்?
மீனாட்சி..அம்மன் கோவில் சித்தரை வீதிகளில்..என்ன..வண்டி..வாகனம்..
போய் இருக்கும்!..எல்லாவற்றுக்கும்..விடை..சொல்கிறது..இந்த காணொளி
சித்ரம்!
அந்த மீன்பிடிக்கும்...கிழவனுக்கு..பின்னால் தெரியும்..'பனகல்'கட்டிட்டத்தில்..
பின்னாளில்..'ஆபீஸ் தாத்தா' என்றழைக்கப்பட்ட..என் அப்பா..இந்தப்..படம்..
எடுக்கும் போது..வேலை பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம்! மஹால்..கட்டிடத்திற்கு..முன்னால்.திரியும்.வாண்டுகளுக்கு..இப்ப..என்ன வயசிருக்கும்?எங்கே..இருப்பாங்க?அப்போ..அமெரிக்கன் காலேஜில் ..படித்துகொண்டிருந்த..பெரிய அண்ணனும்..செயின்ட் மேரிஸ்.ஸ்கூலில்.
படித்துக்கொண்டிருந்த..சின்ன அண்ணனும்..இந்தப் படம் எடுக்கும் போது பார்த்திருப்பார்களா?
37 வயதுள்ள என் அம்மா..ராமாயனச்சாவடி..வீட்டிலிருந்து..கோவிலுக்கு..வந்திருப்பாங்களா?
அவுங்களும்..இந்தப் படம்..எடுக்கும் போது..கோவிலில்..எங்காவது..இருந்துருப்பாங்களா?
விடை தெரியாத கேள்விகள்...விடை சொல்வதற்கும் யாருமில்லை.

No comments:

Post a Comment