Tuesday, March 1, 2011

Mughal - E - Azam - Pyar Kiya To Darna Kya - Lata Mangeshkar

12 comments:

அண்ணாதுரை சிவசாமி said...

Annadurai Sivasamipillai
தயவு செய்து ரீபிளை செய்து பார்க்கவும்.என் மனதை
மிகவும் கவர்ந்த பாடல்."காதலிக்கத்தானே செய்தேன்..
திருடவா செய்தேன்..".அக்பர்..அனார்கலி...சலீம் என்ற
ஜகாங்கீர்..பிருதிவி ராஜ்கபூர்...மதுபாலா..திலீப்குமார்.
மொகலே ஆஜம்..படம்.1960 ல் வந்தது .
சமீபத்தில்..கமலஹாசன் "திலீப்குமாரின் கண்கள் நடித்தது
மாதிரி யாருடைய கண்களும் நடித்து பார்த்தது இல்லை".
சத்தியமான நிஜம்.

பா.ராஜாராம் said...

சித்தப்பா!

நலமா?

எவ்வளவு காலம் ஆச்சு உங்களை, எழுத்தை தளத்தில் பார்த்து!

அருமையான பகிர்வு சித்தப்பா. இந்த பயணத்தில் உங்களை இந்த பாட்டுடன்தான் பார்த்தேன். அப்படியே லயிச்சு, சொக்கிப் போன உங்கள் முகம் நினைவு வருகிறது. மிஸ் யூ சித்தப்பா..

அருமையான பகிர்வு சித்தப்பா!.

இனி, இந்த பாட்டை உங்கள் நினைவு வரும் போதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். :-)

rajasundararajan said...

இப் படம், 'இயேசு சிலுவையில் மரிக்கவில்லை; அல்லாஹ்-ஆல் காப்பாற்றப்பட்டார்' என்னும் திருக்குர்ஆன் வெளிப்படுத்தலை ஒட்டி எடுக்கப்பட்ட படம். அதன்படி, நாட்டுமக்கள்முன் புதைக்கப்படும் அனார்கலி, அவ்வமைப்பின் நிலவறை வழியாகத் தப்பிக்க வழிபண்ணப்படும்.

இயேசுவே (அனார்கலியே) அன்பின் (காதலின்) இலக்கணம். சட்டத்தை மதித்த போதும், காதலுக்காகத் தன் உயிரைக் கொடுக்க முன்வந்து, அதை அர்த்தமற்றதாக்கும் இந்தப் பாடற்காட்சியில் அக்பர், ஜோதாபாய், சலீம், சலீமின் மனைவி என இவர்களின் முகமாற்றம் மிக நுணுக்கமாக நிகழ்த்திக்காட்டப்படும். அனார்கலியாக வரும் மதுபாலா ஓ! அபாரம்!

இப் பாடலுக்கு ராகவனை எழுதச்சொல்லிக் கேட்கவேண்டும் என்றிருந்தேன். நீங்கள் முந்திக்கொண்டீர்கள். நன்றி! வாழ்க்!


Insaan Kisee Se Duniyaa Me Ek Baar Mohabbat Kartaa Hai
மனிதர் இவ்வுலகிலே எவரோடாவது ஒருபோதாவது காதல் கொள்கிறார்

Is Dard Ko Lekar Jiitaa Hai, Is Dard Ko Lekar Martaa Hai
இந்த வலி பொறுத்து வாழ்கிறார், இந்த வலி சுமந்து சாகிறார்


Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீர் ஆயின் அச்சம் எதற்கு?

Jab Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீரே ஆயின் அச்சம் எதற்கு?

Pyaar Kiyaa Koi Chori Nahin Ki
காதலித்தீர், எதையும் களவாடவில்லை

Pyaar Kiyaa
காதலித்தீர்,

Pyaar Kiyaa Koi Chori Nahin Ki
காதலித்தீர், எதையும் களவாடவில்லை

Chhuup Chhuup Aahe Bharnaa Kyaa
ஒளிந்து, பெருமூச்சுகளால் விம்முதல் எதற்கு?


Jab Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீரே ஆயின் அச்சம் எதற்கு?

Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீர் ஆயின் அச்சம் எதற்கு?

Jab Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீரே ஆயின் அச்சம் எதற்கு?

rajasundararajan said...

Aaj Kahenge Dil Kaa Fasaanaa
இன்று சொல்லுவேன் என் உள்ளக் கிடக்கையை

Jaan Bhee Le Le Chaahe Zamaanaa
உயிரையே உலகம் எடுக்க விழைந்தாலும்

Aaj Kahenge Dil Kaa Fasaanaa
இன்று சொல்லுவேன் என் உள்ளக் கிடக்கையை

Jaan Bhee Le Le Chaahe Zamaanaa
உயிரையே உலகம் எடுக்க விழைந்தாலும்


Maut Wahii Jo Duniyaan Dekhe
சாக்காடுதானே உலகுக்குத் தெரியும்

Maut Wahii Jo Duniyaan Dekhe
சாக்காடுதானே உலகுக்குத் தெரியும்

Ghut Ghut Kar Yu Marnaa Kyaa
மூச்சு முட்டிப்பின் சாவது எதற்கு?


Jab Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீரே ஆயின் அச்சம் எதற்கு?

Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீர் ஆயின் அச்சம் எதற்கு?

Jab Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீரே ஆயின் அச்சம் எதற்கு?


Unki Tamannaa Dil Mein Rahegii
அவர்மேல் ஆசை என் நெஞ்சில் இருக்கும்

Shammaa Isee Mahfil Mein Rahegii
வெளிச்சம் இனியும் இவ்வரங்கை மிளிர்க்கும்

Unki Tamannaa Dil Mein Rahegi
அவர்மேல் ஆசை என் நெஞ்சில் இருக்கும்

Shammaa Ise Mahfil Mein Rahegi
வெளிச்சம் இனியும் இவ்வரங்கை மிளிர்க்கும்

Ishq Mein Jiinaa Ishq Mein Marnaa
காதலில் வாழதல் காதலில் சாதல்

Ishq Mein Jiinaa Ishq Mein Marnaa
காதலில் வாழ்தல் காதலில் சாதல்

Aaur Humein Ab Karnaa Kyaa
அல்லால் நான் செய்ய வேறென்ன இருக்கு?


Jab Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீரே ஆயின் அச்சம் எதற்கு?

Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீர் ஆயின் அச்சம் எதற்கு?

Jab Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீரே ஆயின் அச்சம் எதற்கு?


Chhuup Naa Sakegaa Ishq Hamaaraa
மறைக்க ஒண்ணாதது காதல் எமது

Chaaro Taraf Hain Unkaa Nazaaraa
நாலா திக்கிலும் அவரது பரிசு


(Chorus)

Aaaaaaaaaaaaaahaaaaaaaaaaaaaaa
ஆஆஆஆஆஹாஆஆஆஆ

Chhuup Naa Sakegaa Ishq Hamaaraa
மறைக்க ஒண்ணாதது காதல் எமது

Chaaro Taraf Hain Unkaa Nazaaraa
நாலா திக்கிலும் அவரது பரிசு


(Anarkali)

Pardaa Nahin Jab Koi Khudaa Se
திரையொன்றும் இலையென்றால் இறையிடம் இருந்து

Pardaa Nahin Jab Koi Khudaa Se
திரையொன்றும் இலையென்றால் இறையிடம் இருந்து

Bando Se Pardaa Karnaa Kyaa
வழிபற்றுவார் பின்னால் திரைப்படல் எதற்கு?

Jab Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீரே ஆயின் அச்சம் எதற்கு?


(Chorus)

Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீர் ஆயின் அச்சம் எதற்கு?

Jab Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீரே ஆயின் அச்சம் எதற்கு?


(Anarkali)

Pyaar Kiyaa Koi Chori Nahin Ki
காதலித்தீர், எதையும் களவாடவில்லை

Chhuup Chhuup Aahe Bharnaa Kyaa
ஒளிந்து, பெருமூச்சுகளால் விம்முதல் எதற்கு?

Jab Pyaar Kiyaa To Darnaa Kyaa
காதலித்தீரே ஆயின் அச்சம் எதற்கு?

அண்ணாதுரை சிவசாமி said...

ராஜா...தம்பி சுந்தரராஜா ..தம்பியாத்தான் இருக்கணும்...
மனதில் ஏற்படும் வலிகளுக்கு..மருந்தொன்று..தனியா
தரமுடியாதென்பதால்..இசையைப் படைத்திருப்பானோ..
இறைவன்...உண்மையாகத்தான் இருக்க முடியும்!
வரிக்கு வரி..அர்த்தத்துடன்..பாட்டை இரண்டு..மூன்று
முறை..கண்ணீருடன்..ரசித்தேன்.சுந்தரராஜனுக்கு..கோடான
கோடி நன்றிகள்....

rajasundararajan said...

ராகவன் என்றொரு பதிவர் ஆப்ரிக்க நாடொன்றில் இருந்து எழுதுகிறார். கர்நாடக இசை அறிவில் தேர்ந்தவர். என் வேண்டுகோளுக்கு இணங்கி, அண்மையில், 'ப்ரமதவனம் வீண்டும்' என்னும் ஜோக் (நாட்டை) ராக மலையாளப் பாடலைத் தொட்டு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அருமையாக எழுதுகிறார் (கதை, கட்டுரை, கவிதை எல்லாமே). அவரிடம் எனது அடுத்த கோரிக்கையாக, 'ப்யார் கியா தோ டர்ணா க்யா?' என்னும் இந்த 'முகல் - ஏ - ஆஸாம்' படப் பாடல் பற்றி எழுத வேண்டுகோள் விடுக்க இருந்தேன். இந் நிலையில், யாரய்யா இது நமக்குப் பிடித்த பாடலைத் தலைப்பிட்டு ஒரு பதிவு போட்டிருக்கிறார் என்றுதான் உங்கள் தளத்தில் புகுந்தேன். ஆனால் ஒரு சிறந்த படைப்பாளி, "போனாற் போகுது, பொறுக்கிக்கோ!" என்பதுபோல் இகச்சில படைப்புகளையே பதிவேற்றி இருக்கிறீர்கள். ஏன்?

rajasundararajan said...

உங்கள் முதல் இடுகையில் இருந்து வாசிக்கத் தொடங்கினேன்: 'தவம்' deja vu என்று தோன்றியது. 'கருணை' பிடித்திருந்தது. 'தியானம்' நக்கலோடு, உண்மையில் தியானம் என்றால் இன்னதெறும் சுட்டுகிறது. 'புதிய அனுபவமும்...' //நிர்வாணமா மதுரையில் கோரிப்பாளையத்தில் நடந்துட்டு வாங்கன்னா, நடப்பீங்களா? மாட்டீங்க.// என்று உள்ளூர் எடுத்துக்காட்டோடு ஒழுக்கத்தை மரபாக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்தியுள்ளமை சிறப்பு. 'ஆசை'யின் //திருநங்கைத் தீர்வு// வாசித்துச் சிரித்த அக்கணமே, ஆள் சாதாரண ஆள் இல்லை என்று முடிவு செய்தேன். அதற்கான பின்னூட்டங்களுக்கு இடையில் 'பிரசரையும் சுகரையும்' எடுத்து ஆடிய உங்களது நக்கல் மிக அருமை. 'மோகன்..' 'கொள்ளிவாய்ப் பிசாசு' இரண்டும் மிகச் சிறப்பான படைப்புகள். எல்லாவற்றிலும் உங்கள் நகைச்சுவை உணர்வு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இன்னும்...

இருக்கட்டும், பா.ராஜாராம் உங்களுக்கு அண்ணன் மகன் என்று இப்படி வாசிக்க நுழைந்ததில் அறியவந்தேன். வாழ்க! அப்பனும் பிள்ளையும் தப்பாமல் வந்து வாய்த்திருக்கிறீர்கள் எங்களை, எங்கள் தாய்மொழியை வளப்படுத்த.

1955-இல் பிறந்தேன். வணங்குகிறேன்.

அண்ணாதுரை சிவசாமி said...

ரசிப்பதற்கும்..ரசித்ததைப் பாராட்றதுக்கும் ..மனசு வேணும்.
சுந்தரராஜனிடம்..அது..தளும்பத்..தளும்ப இருக்கிறது!அது..
ரொம்ப நாட்களுக்கு பின்னர் 'நார்த்கேட் பாரு'க்கும் என்னைப்
போக வைத்திருக்கிறது.பாராட்டு..மனுசனை என்ன பாடு படுத்துது!
என்னைவிட...சந்தோசப் பட்டது ராஜாதான்.நண்பர்களுடன்..காரில்
போய்க்கொண்டிருக்கும்போது ராஜாவிடம் இருந்து போன்!எதிர் பார்க்கலை.
"சித்தப்பா..சுந்தரராஜனின்..பின்னூட்டத்தைப் பார்த்தீங்களா!"
"பார்க்கலையேடா"
"படிக்கிறேன் கேளுங்க"
கேட்க..கேட்க..இருப்புக்கொள்ளவில்லை!
"அவசரச் செய்தி நான் வீட்டுக்குப் போகணும்"..நண்பர்கள் முகத்தில் ஈயாடவில்லை!
வீட்டுக்கு வந்து கம்ப்யூட்டரை ஒப்பன்பன்னி ரெண்டு மூணு முறை படித்த பின்னர்தான்
மனசு ஒரு நிலைக்கு வந்தது.சரி..மனசுக்கு தோன்றியதை விடாமல் எழுதுவோம்ன்னு ஒரு
எண்ணமும் வந்தது.வெறுமையா..நகர்ந்து கொண்டிருந்த..நாட்களில்..கொஞ்சம்..பசுமையைத்
தெளித்ததற்க்கு..நன்றி சுந்தரராஜன்!

rajasundararajan said...

I salute. And I demand more of your creations.

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு...
அதிலும் பின்னூட்டங்களில் சுந்தரராஜன் அண்ணா கலக்கியிருக்கிறார்.
வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

சித்தப்பா,

ஹிந்தி தெரியாததால், "இந்தப் பாட்டிற்கு, வரிகளுக்கு அர்த்தம் தெரிந்தால் இன்னும் நல்லாருக்கும் சித்தப்பா" என்று உங்களிடம் சொல்லியிருந்தேன். ரா.சு. அண்ணனின் தமிழாக்கத்திற்கு பிறகு, வந்து வந்து கேட்டுப் போகிறேன். சொக்கி வருகிறது. :-)

அப்புறம், இந்தப் பதிவை ஒட்டி சுந்தர்ஜியின் பதிவை பார்த்தீர்களா?

http://sundargprakash.blogspot.com/

கலக்கி இருக்கிறார்.

அண்ணாதுரை சிவசாமி said...

ராஜா..இந்தப் பின்னூட்டத்தை இன்றுதான் பார்த்தேன்.
சுந்தர்ஜியின் பதிவினையும் இன்றுதான் பார்த்தேன்.
இந்தப் பாடலை நான் ரசித்ததை விட எவ்வளவு பேர்
என்னென்ன விதத்தில் ரசித்திருக்கிறார்கள்..சுந்தர்ஜியின்
அருமையான..மிக அருமையான பதிவுகளை பார்க்க,படிக்க
ஒரு சந்தர்பத்தை..ஏற்படுத்திகொடுத்த..உனக்கு..சித்தப்பாவின்
அன்பான வாழ்த்துக்கள்.

Post a Comment