Saturday, September 5, 2009

என்ன செய்யப் போகிறோம்.....

"என்ன செய்யப் போகிறாய்....?" கதாநாயகி கதாநாயகனை ஒரு மாதிரியா பாத்துக்கிட்டு பாடற பாட்டு. இதை வச்சுக்கிட்டுத்தான் இந்தத்தலைப்பையே என்னாலே யோசிக்க முடிஞ்சிச்சு. என்ன செய்யச் சொல்றீங்க....?

1932ல் பேச ஆரம்பிச்ச அந்த மாயப் பிசாசு செஞ்ச வேலை கொஞ்சமா நஞ்சமா? அதிலேயே ஊறப்போட்டு ஊறப்போட்டு, அப்புறம் அதிலேருந்து விடுபடணும்னு நினைச்சு என்னையே நானே நல்லா ஒதறி ஒதறி கம்பியிலே காயப் போட்டாலும், வாசம் போக மாட்டேங்குதே என்ன...பண்ண?
'பெட் லேன்ட்' 'பெட் லேன்ட்' ன்னு ஒருத்தரை கேள்விப் பட்டு இருக்கீங்களா? பாவம், தம் உள்ள ஆளு கோவனத்தைக் கட்டிக்கிட்டு தனி ஆளா நீச்சல் அடிச்சும், வத்தையிலே துடுப்பை வச்சுக்கிட்டு நாலு அஞ்சு பேரா ராமநாதபுறம் கடல் எல்லையிலிருந்து, ராமேஷ்வரத்திற்கு போய்க்கிட்டிருந்த நம்மளை 1914 ஆம் வருஷம் பிப்ரவரி மாசம் 24 ஆம் தேதி 'பாம்பன் ரயில்' பாலத்தை திறந்து வச்சு, நூறு இரநூறு பேரா ஒரே நேரத்தில் சௌரியமா ராமேஷ்வரத்திற்கு போக வச்ச பெரிய மனுஷன். அரசாங்க வேலையிலே சாதாரண குமாஸ்தாவா இருந்த ராமானுஜத்தை, ஸ்ரீ ராமானுஜத்தை கணித மேதை என்று அடையாளம் கண்டு இன பேதம் பார்க்காமல் மேல் படிப்புக்குக்காக அரசாங்க செலவில் லண்டன் அனுப்பி வச்ச பெருந்தன்மையான மனுஷன். பிரிட்டன் அரசிடம் போராடி அனுமதி பெற்று தன் காலத்தில் ஒரு ஜெர்மன் எஞ்சினியரைக் கூட்டிக்கிட்டு வந்து 600 பேரை வச்சிக்கிட்டு 2 வருசத்தில் அபாயகரமா அப்ப கருதப்பட்ட அந்த வேலையிலை ஒரு உயிர் சேதம் இல்லாமல் 20 லட்ச ரூபாய் செலவில் கட்டிமுடிச்ச மனுஷன். ஆச்சு, அஞ்சு வருஷம் போனா நூறு வருஷம் ஆச்சு. பிரபு பெட் லேன்ட். 'THE LORD PETLAND' 1912-1919 ல் சென்னை மாகாண கவர்னர் ஆக இருந்தவர். வேலை மெனக்கிட்டு இப்ப இவரை பத்தி பேச்சு எதுக்கு.

அவர் எழுதியதாக ஒரு சின்ன வரலாற்றுக் குறிப்பு:
"On the general poverty of the masses, Pentland remarked that laborers of Madras city had the habit of frequenting cinema halls to watch movies and suggested that this could be one of the possible reasons for their poverty.Pentland's statement also hints at the possibility of a drastic increase in the number of cinema goers during his Governorate."

எப்ப சொல்றாரு, 1919 ல். ஊமைப் படம் வந்த போது. படம் ஓடிக்கிட்டு இருக்கும், ஒரு ஆளு நீட்டக் கம்பா திரையிலே வச்சு வச்சு நடக்கிற சீனை கதாபாத்திரங்கள் சிரிக்கவேண்டிய நேரத்தில் சிரிச்சும், அழ வேண்டிய நேரத்தில்தொண்டை கிழிய அழுதும் விளக்கிக்கிட்டு இருந்தப்ப.

எனக்கு என்ன சந்தேகம்னா, ஒரு சின்ன விசயம்தான். பேசும் படம் வந்த பின் நல்லவனா நடிக்கிறவன் நல்லவன், கெட்டவனா நடிக்கிறவன் கெட்டவனாகத்தான் இருக்கமுடியும்னு ஒரு சைக்காலஜிகளா நம்ம பயலுகளே ஒரு அஞ்சாறு கோடி மக்களை நம்ப வைக்க முடியும்னு ஆதார பூர்வமாக நிரூபித்து காட்டியிருக்காங்கே. வெள்ளைக்கார பயலுக நரிப்பயலுக, அவைங்களுக்கு எப்படி இந்த யோசனை வராமப் போச்சு! அதுவும் 1919 லேயே நம்ம ஜாதகத்தை தெளிவா கணிச்சுட்டு. கொஞ்சம் ஏமாந்துட்டாய்ங்க. கடைசியா கவர்னர் ஜெனரலா இருந்தாரே அவர் பேரு கூட...ஆமாம் லார்ட் மௌன்ட்பேட்டன். முழுப்பேரு Louis Francis Albert Victor Nicholas Mountbatten,




ஆள் எப்படி. நம்ம ரஜினி மாதிரி இல்லை? அந்தம்மா பேரு எட்வினா மௌன்ட்பேட்டன். ஒரு கிரிமினலான யோசனை அந்த நரிப்பயலுகளுக்கு எப்படி அப்ப வராமப்போச்சு. அவைங்க ஒன்னு பண்ணி இருக்கலாம். நம்ம மௌன்ட்பேட்டனை ஹீரோவா நடிக்கவச்சு ரெண்டு படம் , ரெண்டே ரெண்டு படம் ரிலீஸ் பண்ணி இருக்கணும்.

அவரு இடது கையை கோட்டு பாக்கெட்டுக்குள்ளே வச்சுக்கிட்டு வலதுகை ஒன்னாலே மட்டும் நூறு நூத்தம்பது பேரை அடிச்சு துவம்சம் பண்ணி முடிச்ச ஜோர்லே "ஆப்பிரிக்காவில் இருந்துவந்து அடம் பிடிக்கும் அந்த அரை நிர்வாண பக்கிரியை அடித்து விரட்டுங்கள் நாட்டை விட்டு, அலறி ஓடடட்டும் ஆப்பிரிக்கா நாட்டுக்கே, நா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி"ன்னு சொல்லிக்கிட்டே நாலு விரலை உள்நோக்கி மடிச்சு வச்சுக்கிட்டு ஆட்காட்டி விரலை நட்ட குத்தலா நீட்டி வச்சுக்கிட்டு விசுக்குன்னு. ('விசுக்குன்னு' சத்தம் தியேட்டரே அலர்ற மாதிரி பேக் கிரவுண்டு மியூசிக் ரொம்ப முக்கியமான விஷயம்) உயர்த்தி ரெண்டு மூணு சீனு நடிச்சிருக்கணும்.

அப்புறம் அந்தம்மா லேடி மௌன்ட் பேட்டனை நம்ம பத்மினி மதுரை வீரன்லை கடைசீன்லை கதறி அழுகுமே, அதுமாதிரி அழவைச்சு "பார்த்தாயா மகனே பார்த்தாயா... இந்த பால் வடியும் முகத்தைப் பார்த்தாயா! கேட்டாயா மகனே கேட்டாயா! அந்த கேடு கெட்டவன் சொன்னதைக் கேட்டாயா! ஒத்துழையாமை இயக்கமாம், உப்பு சத்யா கிரகமாம் இன்னுமா உறங்குகிறாய்! எப்படியடா மகனே மயங்கி உறங்க உனக்கு மனது வந்தது! உன் நரம்பு முறுக் கேரவில்லையா நாடி துடிக்கவில்லையா எழு மகனே எழு, விழி மகனே விழி, புறப்படு மகனே புறப்படு அந்த துரோகியை துரத்துங்கள் ஆப்பிரிக்காவுக்கு" கண்ணை அகலமா வச்சுக்கிட்டு வீர வசனம் பேசி இருந்ததுன்னா அந்தம்மா ஈசியா நடிச்சிருக்கும். ஏன்னா, சினிமாவுக்கு வராமையே கிசு கிசுவில் சிக்கினம்மா.நேரு சிக்கிற சிப்பிலேயே தெரிஞ்சிக்கிலாமே. அந்த சினிமாவை காசு கருமத்தைப் பாக்காமே, இந்திய மொழி எல்லாத்துலையும் டப் பண்ணி அந்த நரிப் பயலுவ ரிலீஸ் பண்ணி இருந்திருக்கணும். நம்மளும் என்ன ஏதுன்னு தெரியாமையே தலைவரும் தலைவியும் சொல்றதும் சரிதான்னு சட்ன்னு ஒரு முடிவுக்கு வந்திருப்போம்.

அவங்க சொல்றதிலே என்ன தப்பு? அந்தாளும் ஆப்பிரிக்காவுக்குப் போய் ரொம்ப நாளா இருந்துட்டார்ல, திரும்பவும் போயிரவேண்டியதுதான்னு முடிவு பண்ணி பொங்கி எழுந்து ஒருவழியா அந்தப் பெரிய மனுசனை திரும்பவும் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வச்சிருப்போம். அவரும் ஒன்னு ரெண்டு வருஷம் கூட உயிர் வாழ்ந்திட்டு, நிம்மதியா செத்துபோய் இருப்பாரு. இப்ப வீனாவுளை ஐந்நூறு, ஆயிரத்தில கம்பை பிடிச்சிக்கிட்டு பொக்கை வாய்ச் சிரிப்பை பொய்யா பொழுதன்னைக்கும் சிரிச்சிக்கிட்டு, நம்ம படம் போட்ட நோட்டை பாவிப் பயலுக எது எதுக்கோ பயன் படுத்துராய்கலேன்னு வெந்து நொந்து போய் அவருடைய ஆத்மா தினம் தினம் செத்து போய்க்கொண்டிருக்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்காது. நமக்கும், அவைங்கலே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் லேசு லேசா வந்துக்கிட்டு இருக்கே, அதுவும் வந்து தொலைச்சிருக்காது. நரிப் பயலுக இந்த விசயத்திலே எப்படியோ கொஞ்சம் ஏமாந்திட்டாய்ங்க.

இப்ப இந்தியா எப்படி இருக்கு? நம்ம எப்படி இருக்கோம்? எந்த நிலையிலே இருக்கோம்?

ஸ்ரீ ரமேஷ்ன்னு ஒரு சின்னப் பையன். வயசு 25 க்குள்ளே இருக்கும். இப்ப நம்மெல்லாம் கதை, கவிதை, கட்டுரைன்னு சந்தோசமா இருக்க சமயத்திலே அந்த பையன் தன் வாழ்வில், என்ன பெரிய வாழ்வு 25 வயசு வாழ்வு, ஏற்பட்ட வாழ்வியல் சம்பவத்தை, மரண தைரியத்தோடு எதிர்கொண்ட விதத்தை தன் பிளாக்கில் பதிந்துள்ளான். ஒரு முறை, ஒரே ஒரு முறை முழுசா கடைசி வரைக்கும் படிங்க. படிச்சு முடிச்சதும் சுண்டு விரலில் இருக்கும் ரத்தம் உங்க தலைக்கு ஏறலைன்னா தைரியமா ஒரு முடிவெடுத்து மன நல வைத்தியரை அணுகி மருந்து கிருந்து எடுத்திக்கிறது நல்லது.

அந்த பையனுக்கு வந்ததே அது என்ன? நம்மளை பொறுத்த வரைக்கும் அது விபரீத எண்ணம். ஏதாவது ஒரு மாற்றம் வரணும்னா அந்த பையனுக்கு வந்ததே விபரீத எண்ணம் அந்த தைரியம்....
"ரொம்ப வேணாம்யா ரொம்ப வேணாம், நூத்திலே ஒரு பங்கு நமக்கெல்லாம் வரணும்யா!" இதை நம்ம மனோரமா ஆச்சி சொல்றமாதிரி மனசுக்குள்ளே ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொல்லிபார்த்துக்கிட்டேங்கன்
னா, அப்பத்தான் வழக்கமா பழகிப்போன நம்ம மனசுக்கு அந்த வார்த்தைகளோட எபெக்ட் புரிய ஆரம்பிக்கும்.

என்ன செய்யப் போகிறோம்? என்ன செய்யலாம்?

மதத்துக்கு ஒரு சாமியா சிவன், இயேசு, அல்லா, இந்துக்கள்ளே குட்டி தெய்வங்கள் ஜாஸ்தி. சமீபத்தில் என் மனதை ஈர்த்த, சமுதாயத்தில். புரையோடிப்போன சில மனக் குப்பைகளை சில கவிதைகளில் சந்திக்கு இழுத்து வந்து நிறுத்தும் நவீனக் கவிஞன் 'குமார்ஜி' சொல்கின்ற குட்டி தெய்வங்கள்,

"சுடலை மாடன் இசக்கி பேச்சி
பிரம்ம சக்தி முண்டன் முனியன்
உச்சி மாகாளி மாரியம்மன்
வடக்கு வாசிசெல்வி பத்ரகாளி
முத்தாரம்மன் பூதத்தான் சங்கிலி
இன்னபிற பெயரில்லாப்
பூடங்களும் ...."

ஆகிய இன்ன பிறவற்றை ஆஸ்திகராக இருந்தால் ஒவ்வொருத்தரும், என்னையும் சேர்த்துத்தான் மனசுக்குள்ளை நினைச்சுக்
கிட்டு
"அந்த சின்னப் பையனான ஸ்ரீ ரமேசுக்கு வந்த விபரீத எண்ணம் எனக்கும், என் குடும்பத்தை சேர்ந்த எல்லோரையும் தவிர வேறு எவனுக்காவது வரணும்”னு வேண்டிக்கிரனும்.

நாத்திகராக இருந்தால் காலேஜ், காம்ப்லெக்ஸ், கல்யாண மண்டபங்களோட நம்ம கொள்கையை நிறைவேத்தியாச்சுன்னு திருப்தி அடைந்து "இயற்கை நியதிப்படி மாற்றங்கள்தானே மாறாதது மாற்றம் வந்துதானே தீர வேண்டும்" அப்டின்னு காசு சம்பாதிப்பதற்கு என்னென்ன வழியெல்லாம் இருக்கோ அதையெல்லாம் யோசித்து முடித்துவிட்டு மீதி நேரம் ஞாபகம் இருந்தா, நம்ம சமுதாயம் எப்படி இருக்குன்னு நினைச்சுக்கிட்டே தூங்கிரனும்.

இப்படி வேண்டிக்கிட்டும் நினைச்சுக்கிட்டும் அவுக அவுக பொண்டு, புள்ளைங்க, குடும்பம், கோத்திரம், வீடு, வாசல், வயல், வரப்பு, தோட்டம், தொறவு, மாடு, கண்டு, கோழி,குஞ்சு, வேலை, வெட்டி... இவைகளை சேமமாக பார்த்துக்கொண்டே வெந்ததைத் தின்னு விதி வந்தா செத்துப் போவோம். விடிவு காலம்னு ஒன்னு அதா வராமலா போய்விடும்?

கதை, கவிதை, கட்டுரை, பின்னூடங்கள் ஏனைய பிறவற்றை எல்லாம் எழுதி முடித்துவிட்டு நேரம் கிடைக்கும் போது கீழே உள்
ள தொடர்புச் சங்கிலிக்குள் இருக்கும் அந்த சின்னப் பையனின் விபரீத
எண்ணத்தை:

"சாலை ஓரத்திலே..
சில வேலை அற்றதுகள்...
வேலை அற்றதுகளின்...
நெஞ்சிலே......
சில விபரீத..எண்ணங்கள்..
வேந்தே...!
அது....காலனின்...குறி!"

அண்ணா சொன்னாரே, அந்த விபரீத எண்ணத்தை தற்போது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் வாழ்வியல் சம்பவங்களில் ஒன்றை படித்துப் பாருங்கள். ஒரு வேளை அந்தப் பையன்,

"DO THE THING
YOU FEAR.
AND THE DEATH OF
FEAR IS CERTAIN."

என்ற நார்மன் வின்சென்ட் பீலின் வாசகங்களைப் படித்தி
ருப்பானோ தெரியவில்லை.

"மனச்சாட்சி உறங்கும் போது...
மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.."

இப்ப எனக்கு டேர்ன் மாறி இருக்கு. மனக்குரங்கு உறங்குகிறது. மனச்சாட்
சி ஊர் சுற்றக் கிளம்பியுள்ளது ஸ்ரீ ரமேசால். தொடர்புச் சங்கிலி: http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

இந்த தொடர்புச் சங்கிலியை உங்கள் நண்பர்களுக்
கும் உறவினர்களுக்கும்
அனுப்பி வையுங்கள். அட, ஒன்னு ரெண்டு பேருக்காகவாவது மனச்
சாட்சி ஊர் சுற்ற கிளம்பாமலா போய் விடும், பார்க்கலாம்.

14 comments:

Jerry Eshananda said...

நல்லாவே சுத்துது.

ஆ.ஞானசேகரன் said...

அருமை

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

ramesh sadasivam said...

மிகப் பெரிய மரியாதை செய்திருக்கிறீர்கள். மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அன்புக்கு என்றென்றும் நன்றியுடன்- ரமேஷ்.

ஹேமா said...

சித்தப்பா மூச்சு விட்டு விட்டு வாசிச்சேன்.நல்லாவே இருக்கு.

இன்னும் உங்களை எழுத வைக்க உங்களை உப்புமச்சந்தியில தொடர் பதிவுக்குக் கூப்பிட்டு இருக்கேன்.வாங்க.

அண்ணாதுரை சிவசாமி said...

நன்றி திரு.ஜெர்ரி ஈசானாந்தா

நன்றி திரு.ஞானசேகரன்

நன்றி 'புதுப் பொழிவுடன் தமிழர்ஸ்'
'மதிப்பு மிக்க பதிவரானால்'
எனக்கு சரியாக விளங்கவில்லை.
தயவு கூர்ந்து விளக்குவீர்களா?

நன்றி உலவு.காம்
நான் பிளாக் உலகிற்கு புதியவன்.
நீங்கள் சொல்வதை முயன்று பார்க்கிறேன்.

நன்றி ஸ்ரீ ரமேஷ் சதாசிவம்

நன்றி மகளே,
'ஹேமா' என்ற பெயரைக் கேட்கும் போதும்,
வாழ்க்கையை கவிதையாகச் செய்து நெஞ்சில் ஒரு
விதமான தாக்கத்தை உண்டு பண்ணும் வரிகளை
படிக்குபோதும் 222 நாட்கள் எங்களோடு இருந்து
விட்டு 20-5-78 ல் எங்களைப் பிரிந்து சென்ற என்
செல்ல மகள் 'மது மதியின்'ஞாபகம்தான் வருகிறது.
சமீபத்தில் பிரிவுகளின் வலிகளை மிக்க
திடத்துடன்தான் எதிர் கொண்டேன்.நீ சொன்ன மாதிரி
மூளை சொல்வதை மனது கேட்க மாட்டேன் என்று
சொல்கிறதே.என் செய்வேன்?அதை அறிந்தவர்கள்தான்
உணர முடியும்.
நானும் அம்மாவும் அமெரிக்கா வந்திருந்து
வரும் 12-9-09 மதுரை திரும்புகிறோம்.எனக்கு அடுத்து
உள்ளவர்கள் பூர்த்து செய்யட்டும்.என் மகளுக்காக 12-9-09
அன்றுக்குள் அழைப்பை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் சித்தப்பா,கலக்கி இருக்கீங்களே மக்கா..எங்கிருந்து இவ்வளவு புள்ளி விபரங்கள் சேகரித்தீர்கள் சித்தப்பா?நல்ல ஆயத்த முஸ்தீபு பளிச்சிடுகிறது.விபரங்களுக்குள் முங்கி குளிச்சிருக்கிறீங்க!.பாம்பன் பாலம் திறந்தவரை எல்லாம் நினைவு கொள்வது உங்கள் மற்றொரு பளிச்!சொடுக்க வேண்டிய இடத்தில் சொடுக்கி,இளக்கவேண்டிய இடத்தில் இளக்கி,இளகவேண்டிய இடத்தில் இளகி என பன்முகம் காட்டுகிறது கட்டுரை.ரமதான் வேலை பெண்டு கழடுது.அதான் தாமதம்.யாவரும் நலம் தானே சித்தப்பா?சகோதரி ஹேமா இருவரையும் அழைத்திருக்கிறார்கள்.வாங்க,ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம்.எனக்கும் தாமதமாகும்தான் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் சரி செய்துவிடமுடியும்.பார்க்கலாம் சித்தப்பா.வாழ்த்துக்கள் மக்கா,பின்னுங்க!

அண்ணாதுரை சிவசாமி said...

நன்றிடா ராஜா!31-8-09 ---எப்படிக் கடந்தாய்!அஞ்சலிக்கான உன் கவிதையைக் கண்டேன்.
தனியாக இருந்த உனக்கு உலகம் முழுவதும்...அப்பா போல்....அதே...அன்புடன் நண்பர்கள்.
தைரியமா இரு!

அண்ணாதுரை சிவசாமி said...

ஹேமா,
'வானம் வெளித்த பின்னும்' தூறல் எதுக்கு மகளே!

"போய் வா...
என்கிறாய்...
போகிறேன்...
என்னை....
மட்டும்....
ஏனோ..
விட்டு விட்டு"

அண்ணாதுரை சிவசாமி said...

அன்பு மகளே,
உன் அழைப்பை..தாமதப்படுத்த நேரம்
விரும்பினாலும்...மனது...மறுக்கிறது.உன் வார்த்தையிலே
ஆரம்பிக்கிறேன்:
அடம் பிடித்தது--- அம்மா சொன்னார்கள்
அடம் பிடித்தேனாம்!
அம்மாவை..விட்டு
வருவதற்கு
எனக்கு பிறப்பாம்
அம்மாவுக்கு
மறு பிறப்பாம்!
சுற்றி இருப்பவர்களும்
மனதும் சொல்வது:
அறுபது வயதிலும்
அடம் பிடிக்கிரேனாம்!
அனுதினமும் பிரியாத
அண்ணனைப்
பிரிந்ததற்கும் ...மறப்பதற்கும்!
மீதியையும் விரைவில் முடித்து விடுவேன்.

மதிபாலா said...

நல்லாருக்கு்ங்க சார். கொஞ்சம் நீளம்...மத்தபடி ஓக்கே

மதிபாலா said...

அப்புறம் "அழுத்தத்தின் அதிர்வுகள்"னா என்ன சார்.? சிறுமூளைக்கு சரியா வெளங்கலே.!

அண்ணாதுரை சிவசாமி said...

நன்றி மதி பாலா.அழுத்தங்கள்..அது ஏற்படுத்தும் அதிர்வுகள் எதுவும்
வெளங்காமல் இருப்பது ஒரு விதத்தில் நலமே,மதி பாலா!

ஹேமா said...

சித்தப்பா உங்கள் அன்புக்கு நன்றி.என்னை உங்கள் மகளாகவே பார்க்கிறீர்கள்.மனம் நெகிழ்வாய் வார்த்தைகள் நழுவ...அம்மாவுக்கும் என் வணக்கங்கள்.

உங்கள் வசதி பார்த்துப் பதிவை இடுங்கள்.சுகமாய் இருக்க எப்பவும் வேண்டிக்கொள்கிறேன்.

Post a Comment