Saturday, August 6, 2011

எல்லாமுமே முடியும்தான்...

திண்டுகல்லில் நான் வேலை பார்க்கும்போது வேலைப்பளு

அவ்வளவு கடுமையா இருக்கும்.இரவு ரூமிற்கு வரும் போது

12 மணிக்கு மேல் ஆகி விடும்.காலையில் எந்திரிக்க 7 மணி ஆகி

விடும்.அடுத்த ரூமில் தங்கி இருக்கும் District Education Officer

ரெகுலரா அதிகாலையில் வாக்கிங் செல்பவர்.

அவர் ஒரு நாள் "டெய்லி காலையில் வாக்கிங் போங்க உடம்புக்கு

நல்லது என்றார்"

"எங்கே சார் முடியுது.....இருக்க வேலையே மூச்சு முட்டுது"

அவர் கேட்டார் "பில் கிளிண்டன் தெரியுமா...உங்களுக்கு?"

"ஏன் சார்,,,,,அமெரிக்க ஜனாதிபதி"

"அவரே தினம் ஒரு மணி நேரம் வாக்கிங் போறார்"...சொல்லிவிட்டு

அவர் ிறுவிறுன்னு ோய்ட்டார்.

செவிட்டில் அறைந்தது மாதிரி இருந்தது.அடுத்த நாளில் இருந்து

இன்றுவரை குறைந்தது ஒரு மணி நேரம் வாக்கிங் போறேன்.

நேரத்தை வகைப் படுத்திக்கொண்டால் எல்லாமுமே முடியும்தான்!

6 comments:

Unknown said...

அன்புடையீர்
வணக்கம்!
யடைப் பயிற்சி மிகவும் நன்று.
என் வலைநாடி வந்து கருத்துரை வழங்கினீர்
நன்றி! மீண்டும் வருக!
புலவர் சா இராமாநுசம்

ஹேமா said...

சித்தப்பா....நானும் ரொம்பக் காலமா உடற்பயிற்சி இல்லன்னா நடைப்பயிற்சி செய்யணும்ன்னு யோசிச்சிட்டே இருக்கேன்.நடக்கணும் நடக்கணும் !

அண்ணாதுரை சிவசாமி said...

ஹேமா...
எங்க வீட்டு பெருசில் இருந்து சிறுசுவரைசமீபத்தில் உன் கவிதைகளை
அறிமுகப் படுத்தி இருக்கிறேன் எனது Face Book தளத்தில்.எப்படிடா
இருக்கே?உடம்பை கவனமாகப் பார்த்துக்கொள்.

ஹேமா said...

உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் எனக்கு கிடைத்த சந்தோஷம் சித்தப்பா.வீட்டில் எல்லோரையும் சுகம் கேட்டேன் என்று சொல்லிவிடுங்கள்.45 நாள் விடுமுறை.கனடா போகிறேன்.சீக்கிரம் வந்துவிடுவேன்.சுகமாய் சந்தோஷமாய் இருந்துகொள்ளுங்கள் !

அண்ணாதுரை சிவசாமி said...

நல்லபடியா போயிட்டு வாடா..

அண்ணாதுரை சிவசாமி said...

நன்றிகள் பல ராமானுசம் அய்யா....

Post a Comment