Thursday, August 11, 2011

காட்சிப்பிழை


தூரத்தில் தெரிந்தாள்.......
அவளென்று எண்ணி மெல்ல நகர்ந்தார்....
அவளை நோக்கி....
அவர்தான் என்றெண்ணி அவளும் நகர்ந்தாள்...
அவரை நோக்கி....
அருகில்தான் உணர்ந்தார்கள்.....
அவள் அவர் நினைத்த 'அவள்' இல்லைஎன்றும்..
அவர் அவள் நினைத்த 'அவர்'இல்லை என்றும்..
கீழே விழுந்த அவரது கைத்தடியை ...
முக்கி முனங்கி குனிந்து எடுத்து கொடுத்தாள்...
"பார்த்துப் போங்க "
கட்டையில் வேகும்வரை கனவுகளும் மாயாதோ?

2 comments:

ஹேமா said...

நினைவு மாறாமல் இருக்கும்வரை இந்தக் குழப்பங்கள்தான் சித்தப்பா.நானும் உயிரோசையில் இதே தலைப்பில் எழுதினேன்.இன்னும் என் பக்கத்தில் பதியவில்லை.

என் உப்புமடச் சந்தியின் பக்கமும் நேரம் கிடைக்கிறப்போ வந்து போங்களேன் !
http://santhyilnaam.blogspot.com/

அண்ணாதுரை சிவசாமி said...

அவசியம் பார்க்கிறேன் ஹேமா...

Post a Comment